நெருங்கும் உ.பி. தேர்தல்; வியூகம் அமைத்த பிரதமர் மோடி

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்த வைத்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நெருங்கும் உ.பி. தேர்தல்; வியூகம் அமைத்த பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பிரதமர் மோடி பாஜக எம்பிக்களை நேரில் அழைத்து பேசி வருகிறார். முன்னதாக, கடந்த வாரம், மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்பிக்களை அழைத்து அவர் பேசினார்.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்த வைத்த நிலையில், உத்தரப் பிரதேச எம்பிக்களை அழைத்து மோடி பேசியுள்ளார். முன்னதாக, வாரணாசி சென்றிருந்தபோது, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதில், ஆட்சி நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் பல்வேறு யாத்திரைகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கும் வகையில் ஆறு யாத்திரைகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் சமயங்களில் இம்மாதிரியான யாத்திரைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று.

வரும் தேர்தலில், நிஷாத் மற்றும் ஆப்னா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில், நிஷாத் கட்சி, பாஜக லக்னெளவில் இன்று பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com