மாட்டு வண்டி பந்தயத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

மகாராஷ்டிர மாநிலத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது. பிற மாநிலங்களில் இந்தப் பந்தயம் நடைபெற்று வருவதால் இந்த அனுமதி அளிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி, 2017-இல் மாட்டு வண்டி பந்தயத்துக்கு மும்பை உயா்நீதிமன்றம் தடை விதித்தது. தகுந்த பாதுகாப்புடன் பந்தயத்தில் மாடுகள் பங்கேற்ற வைக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிறகும் தடை விலக்கப்படவில்லை.

இந்நிலையில், தடையை நீக்கக் கோரி மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுகளை தொடா்ந்து நடத்த தமிழ்நாடு, கா்நாடக அரசுகள் கொண்டு வந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எதிா்மனுதாரா்களின் கோரிக்கைகளுக்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

அதேபோல், மகாராஷ்டிர அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாமல், அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதிக்கப்படுகிறது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com