ஒரே பள்ளியில் 18 மாணவர்களுக்கு கரோனா...மும்பையில் பரபரப்பு

கத்தாரிலிருந்து இந்தியா திரும்பிய மாணவரின் தந்தைக்கு கரோனா இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரா நேவி மும்பையில் அமைந்துள்ள பள்ளியில் மாணவர் ஒருவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 18 மாணவர்களுக்கு கரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

பள்ளியில் படித்து வரும் மாணவர் ஒருவரின் தந்தைக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. சமீபத்தில்தான், அவர் கத்தாரிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து, ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் கரோனா பரிசோனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர். தந்தைக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியானபோதிலும், மகனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இச்சூழலில், டிசம்பர் 13ஆம் தேதி, மகன் படிக்கும் பள்ளியில் பல மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஏழு பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, பள்ளியில் உள்ள கிட்டத்தட்ட 650 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், முன்னதாக உறுதி செய்யப்பட்ட ஏழு மாணவர்கள் உள்பட 18 பேருக்கு கோவிட் 19 இருப்பது தெரியவந்தது.

ஒரே பள்ளியில் படிக்கும் 18 மாணவர்களுக்கு கரோனா இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அங்கு மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

வெள்ளிக்கிழமை மட்டும், மகாராஷ்டிராவில் 902 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எட்டு பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com