நாட்டில் தினசரி பாதிப்பு 14 லட்சத்தை எட்டலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

ஒமைக்ரான் பரவல் காரணமாக, நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 14 லட்சத்தை எட்டக்கூடும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கரோனா தடுப்புக் குழுவின் தலைவருமான வி.கே. பால் எச்சரித்துள்ளார்.
நாட்டில் தினசரி பாதிப்பு 14 லட்சத்தை எட்டலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
நாட்டில் தினசரி பாதிப்பு 14 லட்சத்தை எட்டலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

புது தில்லி: ஒமைக்ரான் பரவல் காரணமாக, நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 14 லட்சத்தை எட்டக்கூடும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கரோனா தடுப்புக் குழுவின் தலைவருமான வி.கே. பால் எச்சரித்துள்ளார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக, ஒரு நாள் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. அதனை, அப்படியே, இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப கணித்துப்பார்த்தால், நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 14 லட்சத்தை எட்டக்கூடும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் பரவல் காரணமாக, நாட்டில் கரோனா இரண்டாம் அலை எழுந்த போது, மே மாதத்தில் ஒரு நாள் பாதிப்பு 4 லட்சம் என்ற அளவுக்கு இருந்தது. அதன்பிறகே, மெல்ல குறையத் தொடங்கியது.

தற்போது ஒமைக்ரான் பரவி வருகிறது. இதன் காரணமாக, பிரிட்டனில், வெள்ளிக்கிழமை புதிதாக 93,000 பேருக்கும், பிரான்ஸில் புதிதாக 65,000 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், டென்மார்க் மற்றும் நார்வே பகுதிகளிலும் அதிகளவு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட, டெல்டா வைரஸ் காரணமாக பலருக்கும் கரோனா பரவிய நிலையிலும், இந்த அளவுக்கு கடுமையான கரோனா பரவல் பதிவாகியிருப்பது கவலைதருவதாக உள்ளது.

மத்திய சுகாதாரத் துறையின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வி.கே. பால், ஐரோப்பிய நாடுகளில், இதுவரை ஒமைக்ரான் பரவலால் தினசரி பாதிப்பு அதிகரித்தபோதும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே உள்ளது, இதுவரை மருத்துவக் கட்டமைப்புக்கு எந்த அழுத்தமும் ஏற்படவில்லை.

இதுபோன்ற ஒரு  அதிக பாதிப்பை சந்திக்க நாமும் தயாராக வேண்டும். தற்போது நாட்டில் நிலவும் குளிர்வெப்பநிலையும், வைரஸின் பெருக்கத்துக்கு ஒரு காரணமாக அமையலாம். ஒவ்வொரு நாளும் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிக்கிறது. இது மிகவும் மோசமான சூழல். தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், நாம் அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையை மேற்கோள்காட்டி பேசும் வி.கே. பால், ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் வந்து கொண்டேயிருப்பதால், அறிகுறிகள் இல்லாமல் அல்லது லேசான பாதிப்புகளைக் கொண்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது என்கிறார்.

நாட்டில் இதுவரை 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 32 பேர் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com