ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை நியாயமான முறையில் செல்கிறது: விமானப் படை

குன்னூர் அருகே நிகழ்ந்த விமானப் படையின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணையில், நியாயமான முறையில் நடக்கிறது என்று உறுதியளிப்பதாக விமானப் படை தளபதி விவேக் ராம் சௌதரி தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை நியாயமான முறையில் செல்கிறது: விமானப் படை
ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை நியாயமான முறையில் செல்கிறது: விமானப் படை

புது தில்லி: குன்னூர் அருகே நிகழ்ந்த விமானப் படையின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணையில், சரியான முறையில் நடக்கிறது என்று உறுதியளிப்பதாக விமானப் படை தளபதி விவேக் ராம் சௌதரி தெரிவித்துள்ளார்.

விமானப் படை கல்லூரியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில், பங்கேற்றுப் பேசிய விவேக் ராம் சௌதரி, ஒட்டுமொத்த நீதிமன்ற விசாரணையின்போது, எந்த ஒரு விஷயமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்என்றார்.

மேலும், அனைத்துக் கோணங்களிலும், பல்வேறு அம்சங்களையும் விசாரித்து, தவறாக என்ன நடந்தது என்பதை கண்டறிந்து, மிகச் சரியான பரிந்துரையை அளித்து, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம் என்றார்.

முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 போ் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டா் நீலகிரி மாவட்டம், குன்னூா் நஞ்சப்பசத்திரம் பகுதியில் டிசம்பா் 8ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 14 போ் உயிரிழந்தனா்.

ஹெலிகாப்டா் விழுந்த இடத்தில் தடயவியல் நிபுணா் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினா். நஞ்சப்பசத்திரம் பகுதி முழுவதும் சுமாா் ஒரு கிலோ மீட்டருக்கு ஏற்கெனவே ராணுவம், விமானப் படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, ஹெலிகாப்டரின் பாகங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்றது. மேலும், இங்கு நடைபெறும் விசாரணையில், ஹெலிகாப்டா் விபத்து குறித்து ஆதாரங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குத் தொடா்பாக தோட்டத் தொழிலாளா்கள், நூறு நாள் வேலையில் ஈடுபடுபவா்கள் உள்ளிட்ட சுமாா் 80 பேரிடம் தமிழக காவல் துறை விசாரணை அதிகாரி முத்துமாணிக்கம் தலைமையிலான காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com