
அரசுப் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்த ம.பி. அமைச்சர்
குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் கழிப்பறையை, அந்த மாநில எரிசக்தித் துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் சுத்தம் செய்தார்.
சுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மத்தியப் பிரதேச அமைச்சர் இவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
பள்ளியில் கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை என்று என்னிடம் ஏராளமான பள்ளி மாணவிகள் புகார் குறினார்கள். இதைத்தான் அவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னையாக நினைக்கிறார்கள்.
स्वच्छता अभियान के आज #सातवें_दिवस पर शासकीय कन्या प्राथमिक/माध्यमिक विद्यालय में निरीक्षण के दौरान छात्राओं से बातचीत के दौरान मुझे बताया स्कूल परिसर की टायलेट साफ न होने का कारण हमें काफी परेशानी होती है। यह जानकर स्कूल परिसर में साफ-सफाई की। 3/3@ChouhanShivraj @JM_Scindia pic.twitter.com/wPCrxfjEJ2
— Pradhuman Singh Tomar (@PradhumanGwl) December 17, 2021
எனவே, 30 நாள்கள், கழிப்பறையின் சுத்தத்தை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கல்வி நிலையத்துக்குச் சென்று, அங்கு நானே கழிப்பறைகளை சுத்தம் செய்து, சுத்தத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். இதன் மூலம் மற்றவர்களும் இதனை பின்பற்றுவார்கள் என்றார்.
நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், நாள்தோறும் அரசுப் பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.