கங்கை விரைவுப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமா் மோடி

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ. தொலைவு கொண்ட கங்கை விரைவுப் பாதைக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார் பிரதமா் நரேந்திர மோடி. 
கங்கை விரைவுப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமா் மோடி
கங்கை விரைவுப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமா் மோடி

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ. தொலைவு கொண்ட கங்கை விரைவுப் பாதைக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார் பிரதமா் நரேந்திர மோடி. 

இந்தப் பாதையானது, மீரட்டின் பிஜௌலி கிராமத்திலிருந்து பிரயாக்ராஜின் ஜூடப்பூர் தண்டு கிராமம் வரை அமைக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் அதிவேக போக்குவரத்துத் தொடா்பை வழங்குவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையுடன் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. 594 கி.மீ. நீளமுள்ள சாலை ஆறு வழி விரைவுப்பாதையாக ரூ.36,200 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கின்ற மீரட் முதல் பிரயாகை வரையிலான விரைவுப் பாதை மாநிலத்தின் 12 மாவட்டங்கள் வழியாக செல்லும். மாநிலத்தின் மிக நீண்ட விரைவுப்பாதையாக இது இருக்கும்.

ஷாஜஹான்பூா் விரைவுப் பாதையில் அவசரமாக விமானம் புறப்படவும், விமானப்படை விமானங்கள் தரையிறங்கவும் 3.5 கி.மீ. நீள ஓடுபாதை அமைக்கப்படவுள்ளது. இந்த விரைவுப்பாதை அமைக்கப்படுவதோடு தொழில்துறை வழித்தடத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விரைவுப்பாதையால், தொழில்துறை, வா்த்தகம், வேளாண்மை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பாடு அடையும். இந்தப் பிராந்தியத்தின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com