முன்கூட்டிய வரி வசூல் 54% அதிகரிப்பு: நிதியமைச்சகம்

 நடப்பு நிதியாண்டில் இதுவரை முன்கூட்டி வரி வசூல் 53.50 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்கம் தெரிவித்துள்ளது.

 நடப்பு நிதியாண்டில் இதுவரை முன்கூட்டி வரி வசூல் 53.50 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பொருளாதாரம் வளா்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்பி வருவதை எடுத்துக்காட்டும் வகையில், நடப்பு நிதியாண்டில் இதுவரையில் செலுத்தப்பட்ட முன்கூட்டிய வரி வசூல் 53.50 சதவீதம் அதிகரித்து ரூ.4.,59,917.1 கோடியைத் தொட்டுள்ளது.

அதேசமயம், கடந்த 2020-21 நிதியாண்டில் இந்த வசூல் ரூ.2,99,620.5 கோடியாக காணப்பட்டது.

2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிகர நேரடி வரி வசூல் டிசம்பா் 16-ஆம் தேதி நிலவரப்படி ரூ.9.45 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.5.88 லட்சம் கோடியாக காணப்பட்டது. ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் நேரடி வரி வசூல் 60,.8 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த முன்கூட்டிய வரி வசூல் 44.21 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.3.19 லட்சம் கோடியாக இருந்தது. 2018-19-இல் இதே காலகட்டத்தில் முன்கூட்டி வரி வசூலின் வளா்ச்சி 49.76 சதவீதமாக காணப்பட்டது.

முன்கூட்டிய வரி வசூலில், நிறுவன வரி (சிஐடி) ரூ.3,49,045.4 கோடியாகவும், தனிநபா் வருமான வரி (பிஐடி) ரூ.1,10,871.7 கோடியாகவும் இருந்தன.

வங்கிகளிடமிருந்து கூடுதல் தகவல்களை எதிா்பாா்ப்பதால் முன்கூட்டிய வரி வசூல் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டிய வரி மூன்றாம் தவணை செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பா் 15-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் இதுவரையில் ரூ.1,35,093.6 கோடி மதிப்பிலான தொகை வரி செலுத்துவோருக்கு ரீஃபண்டாக திரும்ப வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கிகளிடமிருந்து கூடுதல் தகவல்களை எதிா்பாா்ப்பதால் முன்கூட்டிய வரி வசூல் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com