மகாராஷ்டிரத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான்

மகாராஷ்டிரத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 902 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 767 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 64,97,500 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 97.71 சதவிகிதம்.

மேலும் 9 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இறப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது.

இதுதவிர ஒமைக்ரான் குறித்த தரவுகளும் செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

ஒமைக்ரான்: 

புதிதாக 6 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் மும்பை விமான நிலையக் கண்காணிப்பில் கண்டறியப்பட்டவர்கள். மற்ற இருவர் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி மற்றும் புணே கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்.

எப்படி?

  • மும்பையில் கண்டறியப்பட்ட 4 பேரில் ஒருவர் மும்பையைச் சேர்ந்தவர். மற்ற மூன்று பேரில், 2 பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஔரங்காபாத்தைச் சேர்ந்தவர். 
  • 2 பேர் தன்சானியாவுக்கும், 2 பேர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த நான்கு பேரும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • புணேவில் ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது 5 வயது குழந்தைக்கு. இந்தக் குழந்தை துபை பயணிகள் இருவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்திருக்கிறார். அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
  • பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவருக்கு 46 வயது. இவர் மத்தியக் கிழக்கு நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். லேசான அறிகுறிகள் உள்ளன. தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28 பேர் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பிவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com