கோவாவில் பிரதமர் மோடி: ரூ. 650 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைப்பு

கோவாவில் ரூ. 650 கோடி மதிப்பிலான 5 உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி
கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி


கோவாவில் ரூ. 650 கோடி மதிப்பிலான 5 உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சுதேசி தரிசன திட்டத்தின்கீழ் ரூ. 28 கோடி மதிப்பில் அகுவாடா கோட்டை சிறைச்சாலை அருங்காட்சியகம் பாரம்பரிய சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிடி பிரிவைக் காணொலி வாயிலாகத் தொடக்க வைத்தார். இது ரூ. 380 கோடி செலவில் கட்டப்பட்டது. ரூ. 220 கோடிக்குக் கட்டப்பட்ட புதிய தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனையைத் தொடக்கி வைத்தார். கோவாவில் வரவிருக்கும் விமான நிலையத்தில் ரூ. 8.5 கோடியில் கட்டப்பட்ட விமானத் திறன் மேம்பாட்டு மையத்தைத் திறந்து வைத்தார்.

கோவாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com