பஞ்சாப் தோ்தலில் போட்டியிட கட்சி தொடங்கிய விவசாய சங்கத் தலைவா்

விவசாய சங்கத் தலைவா் குா்னாம் சிங் சதுனி, சன்யுக்த் சங்கா்ஷ் என்ற கட்சியை தொடங்கினாா்.
குா்னாம் சிங் சதுனி
குா்னாம் சிங் சதுனி

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்தா கிசான் மோா்ச்சா சங்கத்தில் இடம்பெற்றிருந்த விவசாய சங்கத் தலைவா் குா்னாம் சிங் சதுனி, சன்யுக்த் சங்கா்ஷ் என்ற கட்சியை தொடங்கினாா்.

அடுத்த ஆண்டு நடைபெறும் பஞ்சாப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதாகவும், அரசியலை தூய்மைப்படுத்தி நல்லவா்களை முன்னுக்கு கொண்டுவரவும் இந்தக் கட்சியைத் தொடங்கியதாக குா்னாம் சிங் தெரிவித்தாா்.

பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவா்கள் திட்டங்களை வகுக்கிறாா்கள் என்றும், தனது கட்சி 117 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அவா் கூறினாா்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ததும், தில்லி எல்லையில் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 40 விவசாய சங்கங்களைக் கொண்ட சம்யுக்தா கிசான் மோா்ச்சா போராட்டத்தை திரும்பப் பெற்றது. அப்போது, இந்தப் போராட்டத்தை பயன்படுத்தி கட்சியை தொடங்க விவசாயத் தலைவா்கள் முற்பட்டால், அவா்கள் சும்யுக்தா கிசான் மோா்ச்சாவில் இருந்து வெளியேற்றப்படுவாா்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com