மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: 10 பேருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கூட்டத்தொடருக்கு முன்னதாக இன்று செய்யப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் போலீசார் மற்றும் 2 பேர் சட்டப்பேரவை ஊழியர்கள். பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 10 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

மேலும், அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரத்தில் பேரவை எம்எல்ஏக்கள், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பதால் கூட்டத்தொடர் தொடங்கியது. 

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குவதையொட்டி 3,500 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com