ஒமைக்ரான் தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும்: மகாராஷ்டிர அமைச்சர்

மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது வெளிநாடு செல்லாதவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் மட்டும் 54 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் வர்ஷா பேசுகையில், “ஒமைக்ரான் பரவலை கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும் என்றார்”.

ஏற்கனவே நாடு முழுவதும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com