ஸ்மார்ட்ஃபோன் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய தேநீர் வியாபாரி

ஒரு தேநீர் வியாபாரி, தனது 5 வயது மகளின் கல்விக்காக ஸ்மார்ட்ஃபான் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஸ்மார்ட்ஃபோன் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய தேநீர் வியாபாரி
ஸ்மார்ட்ஃபோன் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய தேநீர் வியாபாரி


ஷிவ்புரி: ஒரு தேநீர் வியாபாரி, தனது 5 வயது மகளின் கல்விக்காக ஸ்மார்ட்ஃபான் ஒன்றை வாங்கியுள்ளார். இது செய்தியல்ல. அந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்கியதை அவர் கொண்டாடிய விதம்தான் இன்று சமூக வலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த தேநீர் வியாபாரி, ரூ.12,500 கொடுத்து ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்கியுள்ளார். நாட்டில் பல கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருந்தாலும், இவர் வாங்கிய முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுதான்.

எனவே, அதைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா என்ன? ஸ்மார்ட்ஃபோன் வாங்கி, அதை, தனது மகளின் கையில் கொடுத்து, ஒரு குதிரை வண்டியில் மகளை அமரவைத்து, அலங்கரித்து, வீட்டுக்கு கொண்டு நடனமாடி, பேண்ட் வாத்தியங்கள் இசைக்க, தேநீர் வியாபாரி கொண்டு வந்த விடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது பற்றி தேநீர் வியாபாரி முராரி குஷ்வாஹா கூறுகையில், எனது மகள் அடிக்கடி ஸ்மார்ட்ஃபோன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவரிடம் சொல்லும்போதெல்லாம் விரைவில் வாங்கித் தருகிறேன், நாம் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை இந்த ஊரே பார்க்கும் என்று ஜம்பமாகக் கூறுவேன். உண்மையிலேயே நான் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை செயல்படுத்த திட்டமிட்டு, இவ்வாறு குதிரை வண்டி, பேண்டு வாத்தியம் இசைக்கக் கொண்டு வந்து, ஊரையே பார்க்க வைத்துவிட்டேன் என்கிறார் சிரித்தபடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com