Enable Javscript for better performance
நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 140 கோடியைக் கடந்தது!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 140 கோடியைக் கடந்தது!

    By DIN  |   Published On : 24th December 2021 05:00 PM  |   Last Updated : 24th December 2021 05:00 PM  |  அ+அ அ-  |  

    Vaccination_1

     

    நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 140.31 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    கரோனா பரவலைத் தடுக்க நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. 

    தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்த மத்திய. மாநில அரசுகளால் ஒவ்வொரு பகுதியிலும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் வயதானவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளும் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ளன. 

    இதுபோன்ற பல்வேறு முயற்சிகளால் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 140.31 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் இரு தவணை தடுப்பூசிகளும் அடங்கும். 

    மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 57,44,652 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி, 140.31 கோடியைக் (1,40,31,63,063) கடந்தது. 1,48,79,511 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 7,051 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,15,977 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவிகிதம் 98.40 சதவிகிமாக உள்ளது. இது கடந்த மார்ச் 2020க்கு பிறகு அதிக எண்ணிக்கையாகும். 

    இதையும் படிக்க | ரூ.1 லட்சம் சம்பளத்தில் என்எல்சி நிறுவத்தில் கொட்டிக்கும் வேலைவாய்ப்புக்கள்

    மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து 57  நாள்களாக 15,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,650   பேருக்குப் புதிதாக தொற்று பாதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 77,516 ஆக உள்ளது; இது கடந்த 577 நாள்களில் மிகக் குறைந்த அளவாகும். நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த சதவிகிதம் 0.22 சதவிகிதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவாகும்.

    கடந்த 24 மணி நேரத்தில் 12,05,775  பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார்  66.98 கோடி (66,98,09,816) பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    வாராந்திரத் தொற்று கடந்த 40 நாள்களில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவும், தற்போது 0.59 சதவிகிதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.57 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 81 நாள்களாக 2 சதவிதத்திற்கும் கீழே குறைந்து 116 நாள்களாக 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவும் உள்ளது.


    வயதுவாரியான விவரங்கள்:

    18 - 44 வயது:    
    முதல் தவணை -  49,12,44,875
    இரண்டாம் தவணை -  30,81,35,252

    45 - 59 வயது:    
    முதல் தவணை -  19,25,99,720
    இரண்டாம் தவணை -  14,39,91,660

    60 வயதுக்கு மேல்:    
    முதல் தவணை -  12,03,05,713
    இரண்டாம் தவணை -  9,16,30,819

    சுகாதாரத்துறை:    
    முதல் தவணை -   1,03,86,711
    இரண்டாம் தவணை -  96,69,806

    முன்களப் பணியாளர்கள்:   
    முதல் தவணை -  1,83,84,614
    இரண்டாம் தவணை -  1,68,13,893

    மொத்தம்: 1,40,31,63,063

    இதையும் படிக்க | விண்ணப்பிப்பது எப்படி..? இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp