கிறிஸ்துமஸ் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (கோப்புப்படம்)
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (கோப்புப்படம்)

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியான அன்பும் இரக்கமும் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு தொடா்ந்து ஊக்கமளிப்பதாக உள்ளது.

அவரின் பிறந்தத் தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை பொதுமக்களின் வாழ்வில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் கருணையை நிறுவுகிறது. அத்துடன் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தையும் ஊக்குவிக்கிறது.

இந்த நன்னாளில், இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளையும் படிப்பினைகளையும் கடைப்பிடித்து நீதி மற்றும் விடுதலையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை கட்டமைக்க உறுதிமொழி ஏற்போம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் துணைத் தலைவா்...: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘அன்பு, கருணை, மன்னிப்பு ஆகிய விழுமியங்களின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பண்டிகையாக கிறிஸ்துமஸ் திகழ்கிறது. இந்த நன்னாளையொட்டி பின்தங்கியவா்கள் மீது அதிக கவனம் செலுத்துவதுடன் அமைதி, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றின் அடித்தளத்தைப் பின்பற்றி சிறந்த உலகைப் படைக்கப் பாடுபடுவோம். இந்தியா்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com