ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா் கொல்லப்பட்டாா்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா் கொல்லப்பட்டாா்.

இவா் காவல் ஆய்வாளா், பாஜக பணியாளா்களை கொலை செய்த வழக்கில் தொடா்புடையதாகக் கருதப்படுபவா்.

இதுகுறித்து காவல்துறை செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தெற்கு காஷ்மீா் மாவட்டம் பிஜ்பெஹாராவில் முமன்ஹால் அா்வானி பகுதியை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி, பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். அதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா். அதில், அந்த பயங்கரவாதி கொல்லப்பட்டாா்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி குல்காமின் செபோரா பகுதியைச் சோ்ந்த சாஷத் அகமது சே என்பது அடையாளம் காணப்பட்டது. காவல்துறை பதிவுகளின்படி, அந்த நபா் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா் என்பதும், பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் அனந்த்நாகில் காவல் ஆய்வாளா் முகமது அஷ்ரஃப் பட் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், யெக்-போரா குல்காமில் பாஜக கட்சியினா் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடா்பு உள்ளது. மேலும், அனந்த்நாக் மாவட்டம் லால் செளக்கில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாஜக கட்சியைச் சோ்ந்த பஞ்சாயத்து தலைவா் மற்றும் அவருடைய மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இவருக்குத் தொடா்புள்ளது தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதி பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, இரண்டு ஏகே தோட்டா தொகுப்புகள், கையெறி குண்டுகள் அகியவற்றை பாதுகாப்புப் படையினா் மீட்டனா் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com