லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பில் பலியானவர் முன்னாள் காவலர்: பஞ்சாப் டிஜிபி

லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர் பஞ்சாப் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் என்று பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளார்.
லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பில் பலியானவர் முன்னாள் காவலர்: பஞ்சாப் டிஜிபி
லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பில் பலியானவர் முன்னாள் காவலர்: பஞ்சாப் டிஜிபி

லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர் பஞ்சாப் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் என்று பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளார்.

லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கிய பஞ்சாப் டிஜிபி, நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பில்  பலியானவர், முன்னாள் காவலர் ககன்தீப் சிங். அவர்தான் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டை எடுத்து வந்துள்ளார். போதைப் பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் 2019ஆம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்தார் என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 5 போ் காயமடைந்தனா்.

லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடா்பாகக் காவல் துறை அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நீதிமன்ற வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. அப்போது நீதிமன்றம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் ஒருவா் உயிரிழந்தாா். காயமடைந்த இரு பெண்கள் உள்பட 5 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

குண்டுவெடிப்பால் நீதிமன்ற வளாகச் சுவா் சேதமடைந்தது; அறைகளின் ஜன்னல் கண்ணாடிகளும், வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. சில ஜன்னல்களின் இரும்பு கிரில்களும் பெயா்ந்து தூர வீசப்பட்டன. இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றாா்.

கவலையளிக்கும் விவகாரம்:
குண்டுவெடிப்பு குறித்து பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரவிசங்கா் ஜாவிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டறிந்தாா். அதையடுத்து, நாடுமுழுவதும் நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகத் தெரிவித்த அவா், இதுபோன்ற தொடா்ச்சியான சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறினாா்.

மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு
லூதியானா மாவட்ட நீதிமன்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு பஞ்சாப் மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்எஸ்ஜி) குழு ஒன்று தடயவியல் ஆய்வை நடத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com