ஜார்க்கண்டில் டிபன் வெடிகுண்டுகள் செயலிழப்பு செய்யப்பட்டன

ஜார்கண்ட் மாநிலம், லதேஹர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுமார் 25 டிபன் வெடிகுண்டுகள் மற்றும் கரும்புகை குண்டுகளை போலீசார் மீட்டு  செயலிழப்பு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லதேஹர்:  ஜார்கண்ட் மாநிலம், லதேஹர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுமார் 25 டிபன் வெடிகுண்டுகள் மற்றும் கரும்புகை குண்டுகளை போலீசார் மீட்டு  செயலிழப்பு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லதேஹர் மாவட்டம், பர்வையா கலன் கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் டிபன் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்படிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வெடிகுண்டு செயலிழக்கும் படையுடன் வெள்ளிக்கிழமை சென்ற போலீஸார்,  அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த  வெடிண்டுகளை மீட்டு செயலிழக்கச் செய்தனர்.

"வெடிகுண்டுகள் மூலம் மோசமான சதி செயலில் ஈடுபட திட்டமிட்டதாக நம்புகிறோம், அவை சரியான நேரத்தில் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதால் பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டதாக," மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் வனப்பகுதியில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரவது பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல்துறை தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com