நாடாளுமன்றம், பேரவைகளில் திட்டமிட்ட அமளியால் தொந்தரவு: மக்களவைத் தலைவா் கவலை

நாடாளுமன்றம், சட்டப்பேரவை அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது சரியானதல்ல’ எனத் தெரிவித்த மக்களவைத் தலைவா்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

நாடாளுமன்றம், சட்டப்பேரவை அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது சரியானதல்ல’ எனத் தெரிவித்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘திட்டமிட்டு நடத்தப்படும் அமளிகளால் பெரும் தொந்தரவு ஏற்படுகிறது’ என்றும் கவலை தெரிவித்தாா்.

அஸ்ஸாம் சட்டப்பேரவையின் எண்ம (டிஜிட்டல்) தொலைக்காட்சியை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து ஆற்றிய உரை:

விவாதங்களும், ஆலோசனைகளும் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். ஆனால், அவையில் நடைபெறும் விவாதங்களைத் தடுப்பதும், அவையில் குறைவான அளவில் உறுப்பினா்களின் வருகைப் பதிவு இருப்பது கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும். கருத்து வேறுபாடுகளால் அவை நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படக் கூடாது. இதை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்களும், எதிா்க்கட்சியினரும் ஏற்க மறுப்பது வழக்கமானதுதான்.

இதுபோன்ற பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசித்து அவையை சுமுகமாக நடத்தி மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்பட வேண்டும். அவைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமளியில் ஈடுபடுவது அரசியலமைப்பு ரீதியிலும், நெறிமுறையிலும் சரியானதல்ல.

அதிலும், பல நேரங்களில் அமளி திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இது அவையை நடத்துவதற்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்துகிறது.

அமளியும் ஒத்திவைப்பும் இந்திய பாரம்பரியத்துக்கு ஏற்ல்ல. ஆகையால், மக்கள் பிரதிநிதிகள் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அவையில் உண்மையாகச் செயல்பட வேண்டும்.

நம் நாடு 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒன்றிணைக்கும் அவைகளின் செயல்பாடுகளை மறுஆய்வுக்கு உள்படுத்த வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாக அஸ்ஸாம் உள்ளது. பன்முக ஒற்றுமைக்கு இலக்கணமாக அஸ்ஸாம் திகழ்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com