
கோப்புப்படம்
கொல்கத்தா: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆனால் தென் ஆப்பிரிக்காவில் காணப்படுவது போல் பெரும்பாலானோருக்கு தொற்று தீவிரம் லேசானதாக இருக்கும், தடுப்பூசிகள் உதவும் என்று முதன்முதலில் தொற்றை கண்டுப்பிடித்த தென் ஆப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏஞ்சலீக் கூட்ஸீ தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் முதன்முதலாக ஒமைக்ரான் தொற்றை அடையாளம் கண்டவர் பெண் மருத்துவர் ஏஞ்சலீக் கூட்ஸீ.
இவர் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் தொற்று குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் காணப்படுவது போல் பெரும்பாலானோருக்கு தொற்றின் தீவிரம் லேசானதாகவே இருக்கும். மேலும் தற்போதுள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரான் பரவலை நிச்சயமாக கட்டுப்படுத்தும்.
"தற்போதுள்ள தடுப்பூசிகள் பரவுவதைக் குறைக்க பெரிதும் உதவும், தடுப்பூசி போட்டவர்கள் அல்லது ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என குறைவான நபர்களே ஒமைக்ரான் தொற்றை பரப்புவார்கள். ஆனால் தடுப்பூசி போடப்படாதவர்கள் 100 சதவிகிதம் தொற்றை பரப்புவார்கள். அவர்களுக்கு அதிக "ஆபத்து" உள்ளன என்று அவர் கூறினார். .
கரோனோ மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் தொற்றை முதன்முதலில் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்த தென் ஆப்பிரிக்க நிபுணரின் கூற்றுப்படி, கரோனா தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை, மேலும் வரும் நாள்களில் அது பரவக்கூடியதாக மாறும்.
ஒமைக்ரானுடன் கரோனா தொற்று முடிந்துவிடும் என்ற சில நிபுணர்களின் கருத்தாக உள்ளது, "நான் அதை அப்படி நினைக்கவில்லை. இது கடினமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது உள்ளூர் நோயாக மாறும் என்று நான் கருதுகிறேன். தற்போது நிலவுவது கரோனா தொற்றின் பலவீனமான மாறுபாடாகும். விரைவில் முடிவுக்கு வரும்.
இந்தியாவில் "ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும், ஆனால் தென் ஆப்பிரிக்காவில் காணப்படுவது போல் பெரும்பாலானோருக்கு தொற்றின் தீவிரம் லேசானதாகவே இருக்கும் என்று நம்புகிறோம்,
இதையும் படிக்க | பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்: ராகுல் காந்திடிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தகுதித்தாள் தேர்வில் மீண்டும் திருக்குறள் சேர்ப்பு
கட்டுப்பாட்டை மீறி வளரும் எந்த வைரஸும் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
மேலும் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஆண்டு இறுதி கொண்டாட்டங்களைத் தவிப்பதற்கு ஒமைக்ரான் வகையின் தன்மையைப் பற்றி விவாதிக்கையில், ஒமைக்ரான் தொற்றின் ஒரே நோக்கம் வெப்பமான உடலைப் பாதித்து உயிர்வாழ்வதுதான். எனவே இது "வெப்பமான உடல்களை" தாக்குகிறது மற்றும் குழந்தைகளையும் பாதிக்கும். ஆனால் அவர்கள் சராசரியாக ஐந்து அல்லது ஆறு நாள்களில் குணமடைந்து விடுவார்கள்," என்று அவர் கூறினார்.
ஒமைக்ரான் மாறுபாடு அடைந்து மீண்டும் அதன் தன்மையை மாற்ற முடியுமா? "மாறுபாடு அடையும், இது எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தானதாக வேறு கொடிய நோயாக மாறக்கூடும், அல்லது மாறுபாடு அடையாமலும் போகலாம்."
மேலும் 61 வயதான மருத்துவ பயிற்சியாளர்கள், முகக்கவசம் அணிவது மற்றும் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற மனித நடத்தைகள் ஒமைக்ரான் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்.
அதே சமயத்தில் " ஒமைக்ரானை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது".
"தடுப்பூசிகள், பூஸ்டர்கள், முகக் கவசங்களை அணிவது, நல்ல காற்றோட்டமான இடங்களில் இருப்பது, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கூட்டமான இடங்களில் செல்வது மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதை தவிர்க்க வேண்டும்.
கரோனா தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் என்ன? எப்போது தொற்று அறிகுறிகளை பரிசோதிக்க வேண்டும்?, எப்போது மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்." என்று டாக்டர் ஏஞ்சலீக் கூட்ஸீ கூறினார்.
கரோனா தடுப்பூசி மட்டுமே தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வராது. முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, காற்றோட்டமான இடங்களில் இருப்பது உள்ளிட்ட மக்கள் கடைப்பிடிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தகுதித்தாள் தேர்வில் மீண்டும் திருக்குறள் சேர்ப்பு