Enable Javscript for better performance
Self awareness, discipline our strength in fighting Omicron, PM Modi- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஒமைக்ரானுக்கு எதிராக சுய விழிப்புணர்வும், ஒழுக்கமுமே நமது பலம்: பிரதமர் மோடி

    By DIN  |   Published On : 26th December 2021 12:07 PM  |   Last Updated : 26th December 2021 12:07 PM  |  அ+அ அ-  |  

    Self awareness, discipline our strength in fighting Omicron, PM Modi

    கோப்புப்படம்


    ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கு எதிரான போரில் சுய விழிப்புணர்வும், சுய ஒழுக்கமும்தான் நாட்டின் பலம் என பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் 84-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒலிபரப்பானது. 

    இதில் அவர் கூறியது: 

    "புதிய வகை கரோனா தொற்று நம் வீட்டின் கதவையும் தட்டியுள்ளது. இந்தப் புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து நம் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். நாளுக்குநாள் புதிய தரவுகள் கிடைக்கின்றன.

    இதையும் படிக்கஇந்தியாவில் 422 பேருக்கு ஒமைக்ரான்

    இதுபோன்ற புதிய வகை கரோனாவுக்கு எதிராகப் போராட சூழலில் சுய விழிப்புணர்வும், சுய ஒழுக்கமும்தான் நாட்டின் பலம். கரோனாவை வீழ்த்தக்கூடிய நமது கூட்டு பலம். இந்தப் பொறுப்புணர்வுடன் நாம் 2022-க்குள் நுழைவோம். 

    100 ஆண்டுகளில் சந்தித்திராத பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியாவால் போராட முடிகிறது என்றால், அது அனைவரது கூட்டு முயற்சி. இதுதான் மக்களின் பலம். ஒவ்வொரு கடினமான தருணத்திலும் நாம் ஒரு குடும்பம்போல் ஒருவருக்கொருவர் துணை நிற்கிறோம். தடுப்பூசி எண்ணிக்கைகளை உலகுடன் ஒப்பிட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா இதைக் கையாண்டுள்ளது.

    140 கோடி தடுப்பூசியைக் கடந்திருப்பது ஒவ்வொரு இந்தியரின் சாதனை."
     


    TAGS
    pm modi

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp