
பிகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் 6 பேர் பலியானார்கள்.
பிகார் மாநிலம், முசாபர்பூர் நகரில் உள்ள நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்துச் சிதறியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்.
இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தின்போது 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
பாய்லர் வெடித்த சத்தம் சுமார் 5 கி.மீ. தூரத்துக்குக் கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே பாய்லர் வெடித்துச் சிதறிய விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.