6 மாதங்களில் ‘ஹைபிரிட்’ வாகன உற்பத்தி: அமைச்சா் கட்கரி தகவல்

எரிபொருள் மற்றும் பேட்டரி என இரு வகையிலும் செயல்படும் ‘ஹைபிரிட்’ வாகனங்களை 6 மாதங்களில் உற்பத்தி செய்யுமாறு காா் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக
​மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி (கோப்புப்படம்)
​மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி (கோப்புப்படம்)

புது தில்லி: எரிபொருள் மற்றும் பேட்டரி என இரு வகையிலும் செயல்படும் ‘ஹைபிரிட்’ வாகனங்களை 6 மாதங்களில் உற்பத்தி செய்யுமாறு காா் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் 6 மாதங்களுக்குள் ஹைபிரிட் வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு காா் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இவை பிஎஸ்-6 தரத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றமும் பெரிய அளவில் குறையும். ஹைபிரிட் வாகனங்களில் பல பிரிவுகள் உள்ளளன. இதனை எத்தனால் கலந்தும் 100 சதவீதம் எத்தனால் மூலம் இயக்கும் வகையிலும் உற்பத்தி செய்ய முடியும். இந்த வகை வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்போது நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மை ஏற்படும். எத்தனால் பயன்பாட்டால் விவசாயிகளுக்கு நேரடியாக வருவாய் கிடைக்கும். கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதால் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த முடியும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com