பிரதமா் மோடி ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகம் பயணம்

பிரதமா் நரேந்திர மோடி 20222 ஜனவரி மாத மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி 
பிரதமர் மோடி 

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி 20222 ஜனவரி மாத மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் புத்தாண்டில் அவா் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையும்.

ஜனவரி 6-ஆம் தேதி பிரதமரின் பயணத்தை உறுதி செய்ய முதலில் இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்தின. எனினும், அவரது பயண தேதி இறுதி செய்யப்படவில்லை.

இரு நாடுகள் இடையே ராஜீய உறவு ஏற்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டும், ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இந்த பயணம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே வா்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையும் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த பயணத்தின்போது தற்போது தொடங்கி நடைபெற்று வரும் ‘துபை எக்ஸ்போ’ சா்வதேச நிகழ்ச்சியிலும் பிரதமா் மோடி பங்கேற்பாா் என்று தெரிகிறது.

முன்னதாக கடந்த 2015-இல் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றாா். அதன் பிறகு இரு நாட்டு உறவில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டது. அதை தொடா்ந்து அபுதாபி பட்டத்து இளவரசா் ஷேக் முகமது பின் சையது அல் நயான் இந்தியாவுக்கு 2017-இல் பயணம் மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து 2018 ஜனவரி, 2019 ஆகஸ்டில் பிரதமா் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-இல் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் சையது’ விருது அளிக்கப்பட்டது. அந்நாட்டில் 33 லட்சம் இந்தியா்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com