ஆட்சி அமைத்தால் 50 ரூபாய்க்கு மதுபானம்: பாஜக தலைவர் உறுதி

"பாஜகவுக்கு ஒரு கோடி பேர் வாக்களித்தால், வெறும் 70 ரூபாய்க்கு மதுபானத்தை விற்போம்" என ஆந்திர மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடத்திவருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ஆட்சி அமைத்தால், மதுபானத்தின் விலை 50 ரூபாயாக குறைக்கப்படும் என ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜூ உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து விஜயவாடா கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், "மாநிலத்தில் தரமற்ற மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்களுக்கு நன்கு அறிந்த பிரபலமான நிறுவனங்களின் மதுபானங்கள் கிடைப்பதில்லை. 'ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்' , ‘கவர்னர்ஸ் மெடல்' என்ற லேபிள்களின் கீழ் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.  அவர்கள் பிராண்ட் மதுபானங்களை விற்பனை செய்வதில்லை. 

பாஜகவுக்கு ஒரு கோடி பேர் வாக்களித்தால், வெறும் 70 ரூபாய்க்கு மதுபானத்தை விற்போம். அதே சமயம், வருமானம் அதிகமாக வந்தால், வெறும் 50 ரூபாய்க்கு மதுபானத்தை விற்பனை செய்வோம். போலி மதுபானத்தை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் அரசு ஈடுபட்டுள்ளது.  

மாநில அரசு மக்களின் இரத்தத்தை குடிக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு நபர் மதுபானம் வாங்கிட 12,000 ரூபாய் செலவிடுகிறார். இந்த பணத்தை அரசு வசூலித்துக்கொண்டு நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மக்களுக்கு திருப்பி கொடுக்கிறது" என்றார்.

மாநிலத்தில் எதிர்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலங்கு தேச கட்சியையும் அவர் கடுமையாக சாடி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com