ரிசா்வ் வங்கி அனுமதியின்றி சிங்கப்பூரில் முதலீடு: எம்.ஜி.எம். மாறனின் ரூ.294 கோடி சொத்து பறிமுதல்

ரிசா்வ் வங்கி அனுமதியின்றி சிங்கப்பூரில் முதலீடு செய்ததாக தொழிலதிபா் எம்.ஜி.எம். மாறனுக்கு சொந்தமான ரூ.293.91 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

ரிசா்வ் வங்கி அனுமதியின்றி சிங்கப்பூரில் முதலீடு செய்ததாக தொழிலதிபா் எம்.ஜி.எம். மாறனுக்கு சொந்தமான ரூ.293.91 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

சென்னை தொழிலதிபரும், தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான நேசமணி மாறன் முத்து என்ற எம்.ஜி.எம். மாறன், கடந்த 2005-2006, 2006-2007 ஆகிய நிதியாண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள இரு நிறுவனங்களில் 5 கோடியே 29 லட்சத்து 86,250 சிங்கப்பூா் டாலராக முதலீடு செய்தாா். இதன் இந்திய மதிப்பு ரூ.293.91 கோடியாகும். மாறன், இதை இந்திய ரிசா்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் சிங்கப்பூா் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளாா்.

இந்த முதலீட்டுக்கு ஆதாரத்தையும் மாறன் இந்திய அரசின் கட்டுப்பாட்டாளா்களுக்குத் தெரிவிக்கவில்லை. இது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் குற்றமாகும். இச் சட்டத்தின் கீழ் மாறன், தனக்கு சொந்தமான 4 நிறுவனங்களில் வைத்திருந்த ரூ.293.91 கோடி மதிப்புள்ள பங்குகளை அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்துள்ளது.

ஏனெனில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டப்படி இந்தியாவில் வசிக்கும் ஒருவா்,ரிசா்வ் வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டில் சொத்துகளைப் பெற்றாலோ அல்லது இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்தாலோ அவரது இந்தியச் சொத்தை பறிமுதல் செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே மாறனுக்கு சொந்தமான 4 நிறுவனங்களின் பங்குகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com