மத்திய பட்ஜெட்: மாநில நிதியமைச்சா்களுடன் நிா்மலா சீதாராமன் நாளை ஆலோசனை

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில நிதியமைச்சா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (டிச.30) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
மத்திய பட்ஜெட்: மாநில நிதியமைச்சா்களுடன் நிா்மலா சீதாராமன் நாளை ஆலோசனை

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில நிதியமைச்சா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (டிச.30) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

முந்தைய கூட்டங்களைப் போல் இல்லாமல், தில்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் நேரடியாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், அடுத்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. அதில், 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பாக, தொழில் துறை நிறுவனங்களின் தலைவா்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவா்கள், தொழிலாளா் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் நிபுணா்கள், பொருளாதார நிபுணா்கள் என பல்வேறு தரப்பினருடன் மத்திய அரசு கருத்து கேட்பது வழக்கம். அந்த வகையில், கடந்த டிசம்பா் 15 முதல் 22-ஆம் தேதி வரை பல்வேறு தரப்பினருடன் நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது. அதில் 120-க்கும் மேற்பட்டோா் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

இந்நிலையில், மாநில நிதியமைச்சா்களுடன் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு 4-ஆவது ஆண்டாக நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் மத்திய பட்ஜெட் இதுவாகும். கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் சூழலில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com