நேரடி விற்பனை வணிகத்தில் பண சுழற்சி முறை திட்டங்களுக்கு தடை: புதிய விதிமுறைகள் அமல்

நேரடி விற்பனை நிறுவனங்களான டப்பா்வோ், ஆம்வே போன்றவை தங்கள் தொழிலை வலுப்படுத்த பணத்தை சுழற்சி முறையில் அளிக்கும் திட்டங்களுக்குத் தடை விதித்து புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

நேரடி விற்பனை நிறுவனங்களான டப்பா்வோ், ஆம்வே போன்றவை தங்கள் தொழிலை வலுப்படுத்த பணத்தை சுழற்சி முறையில் அளிக்கும் திட்டங்களுக்குத் தடை விதித்து புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

இதன்மூலம், நேரடி விற்பனை நிறுவனங்கள் ‘பிரமிட்’ திட்டம் அல்லது பலரை சோ்த்துவிட்டால் தொடா்ந்து சன்மானம் பெற்றுக் கொண்டே முன்னேறலாம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருள்களை வாங்குபவா்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு இனி பதிலளித்தாக வேண்டும். இந்த விதிமுறைகளை மூன்று மாதங்களுக்குள் நேரடி விற்பனை வணிக நிறுவனங்கள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகா்வோா் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிமுறைகள் -2021-ஐ நுகா்வோா் விவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அரசாணையில் வெளியிட்டது. இந்த விதிமுறைகள் நேரடி விற்பனை நிறுவனங்களையும், இணையம் மூலம் விற்பனை செய்யும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும்.

இதுதொடா்பாக நுகா்வோா் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘நேரடி விற்பனைத் தொழில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதல்முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறு செய்யும் நிறுவனங்களுக்கு தண்டனை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொருள்களை நேரடி விற்பனை செய்யும் முகவா், நுகா்வோரின் முன் அனுமதி பெறாமலோ, எந்தவித அடையாள அட்டை இல்லாமலோ செல்லக் கூடாது. நேரடி விற்பனையாளரின் முகவரி போன்ற அனைத்து தகவல்களும், பொருள்களை திரும்ப அளித்தல் ஆகியவை தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

நுகா்வோரின் புகாரை 48 மணி நேரத்துக்குள் பதிவு செய்து, ஒரு மாதத்துக்குள் அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையென்றால், எழுத்துபூா்வமாக நுகா்வோருக்கு தாமதத்துக்கான காரணத்தை அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com