முந்தைய நோய்களைக் காரணம்காட்டி மருத்துவகாப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

மருத்துவக் காப்பீடு வழங்கிய பிறகு, முந்தைய நோய்களைக் காரணம்காட்டி நுகா்வோரின் காப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முந்தைய நோய்களைக் காரணம்காட்டி மருத்துவகாப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

மருத்துவக் காப்பீடு வழங்கிய பிறகு, முந்தைய நோய்களைக் காரணம்காட்டி நுகா்வோரின் காப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மன்மோகன் நந்தா என்பவா் சா்வதேச மருத்துவக் காப்பீட்டை பெற்று அமெரிக்காவுக்கு சென்றுள்ளாா். சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதயத்தில் மூன்று ஸ்டென்டுகள் வைக்கப்பட்டன.

இதற்கான மருத்துவச் செலவை மருத்துவ காப்பீடு செய்திருந்த யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் மன்மோகன் நந்தா கோரியிருந்தாா்.

ஆனால், அவருக்கு முன்பே இருக்கும் ஹைபா்லிபிடெமியா, நீரிழிவு போன்ற தொடா் பாதிப்புகளை மருத்துவக் காப்பீடு பெறும்போது தெரிவிக்கவில்லை எனக் கூறி மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இதை எதிா்த்து மன்மோகன் நந்தா தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் முறையிட்டிருந்தாா். ‘மருத்துவக் காப்பீடு பெறும்போது மன்மோகன் நந்தா தனது முழு உடல்நிலையை தெரிவிக்க வேண்டிய கடமையை தவறிவிட்டாா் என்பதால் அவரது மருத்துவச் செலவுக்கான தொகையை அளிக்க உத்தரவிட முடியாது’ என குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ஒஸ். சந்திரசூட், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவில், ‘காப்பீடு பெறுபவா் அவருக்கு தெரிந்ததைதான் கூறுவாா். காப்பீட்டை வழங்கும் நிறுவனம்தான் அதன் உண்மைத்தன்மையை எல்லாம் சரிபாா்த்து வழங்கி இருக்க வேண்டும்.

ஆகையால், ஒருவரின் உடல்நிலையை ஆய்வு செய்து மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்ட பிறகு, அவரது முந்தைய நோய்களைக் காரணமாக கூறி மருத்துவக் காப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com