நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் இன்று (டிச.29) சந்திக்க உள்ளனர்.
தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திருமாவளவன், சு.வெங்கடேசன், நவாஸ் கனி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமித்ஷாவை இன்று சந்திக்கிறது.
இந்த சந்திப்பின்போது நீட் தேர்வின் அவசியமின்மை குறித்தும், அதனால் மாணவர்கள் சந்திக்கும் இன்னல்கள், கல்வி முறை குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளது.