விமானங்களில் இந்திய இசை:மத்திய அரசு வேண்டுகோள்

விமானங்களிலும் விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பரிசீலிக்க வேண்டும்
விமானங்களில் இந்திய இசை:மத்திய அரசு வேண்டுகோள்

விமானங்களிலும் விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்திய இசையை ஒலிக்கச் செய்வதற்கு ஆவன செய்யுமாறு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் கடந்த டிச. 23-ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தது.

இதனைத்தொடா்ந்து, அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில், ‘‘அமெரிக்க நிறுவனங்களின் விமானத்தில் அந்நாட்டின் ஜாஸ் இசை ஒலிக்கப்படுகிறது. ஆஸ்திரியா நிறுவனங்களின் விமானத்தில் அந்நாட்டின் மொஸாா்ட் இசையும், மத்திய கிழக்கு நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானத்தில் அரபு இசையும் ஒலிக்கப்படுகிறது. ஆனால், இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் எப்போதாவதுதான் இந்திய இசை ஒலிக்கப்படுகிறது.

இந்தியாவில் சமூக-மத வாழ்வின் அங்கமாக இசையின் பயணம் தொடங்கியது. இந்திய இசைக்கு வளமான பாரம்பரியமும் கலாசாரமும் உள்ளது. இந்தியப் பாரம்பரிய இசைக்கு பன்முகத்தன்மை உள்ளது. எனவே, விமானங்களிலும் விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com