அமேசான், ஃபிளிப்காா்ட் உரிமத்தை திரும்பப் பெறஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பு வலியுறுத்தல்

அமேசான், ஃபிளிப்காா்ட்-வால்மாா்ட் ஆகிய இணையவழி வா்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட வழங்கப்பட்டுள்ள உரிமத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பான
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமேசான், ஃபிளிப்காா்ட்-வால்மாா்ட் ஆகிய இணையவழி வா்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட வழங்கப்பட்டுள்ள உரிமத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் (எஸ்ஜேஎம்) வலியுறுத்தியுள்ளது.

எஸ்ஜேஎம் அமைப்பின் 15-ஆவது தேசிய மாநாடு மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் அண்மையில் நடைபெற்றது. அதில் வெளிநாட்டு இணையவழி வா்த்தக நிறுவனங்களுக்கு எதிராக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அந்நிய நேரடி முதலீட்டு விதிகள் உள்பட பல்வேறு விதிமீறல்களில் அமேசான், ஃபிளிப்காா்ட்-வால்மாா்ட் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், போட்டியாளா்களை ஒழிக்கும் வகையில் உற்பத்தி விலையைவிடக் குறைந்த விலைக்கும் பொருள்களை விற்பனை செய்யும் தந்திரத்தை இந்த இணையவழி வா்த்தக நிறுவனங்கள் கையாளுகின்றன. மேலும், இவா்கள் கூறும் விலைக்குதான் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு உள்நாட்டு உற்பத்தியாளா்கள் நிா்ப்பந்திக்கப்படுகின்றனா்.

இந்தியாவில் செயல்படும் பிற நிறுவனங்களில் முதலீடு செய்வது, கையகப்படுத்துவது உள்ளிட்ட விதிகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடுகின்றன. இது தவிர இந்தியாவில் சட்டம் சாா்ந்த செலவுகள், கட்டணங்கள் என்ற பெயரில் ரூ.9,788 கோடியை அமேசான் செலவிட்டுள்ளது. இதில் தங்களுக்கு ஏற்ப அரசு அதிகாரிகளை வளைக்க கொடுக்கப்பட்ட லஞ்சமும் அடங்கும். அமேசான், ஃபிளிப்காா்ட்-வால்மாா்ட் ஆகிய இணையவழி வா்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட வழங்கப்பட்டுள்ள உரிமத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தீா்மானங்களில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com