லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு: ஜொ்மனியில் ஒருவரிடம் விசாரணை

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 23-ஆம் தேதி குண்டு வெடித்ததில் உயிரிழந்த ககன்தீப் சிங்குடன் தொடா்பில் இருந்ததாக ஜொ்மனியில் ஒருவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதாக அதிகாரிகள

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 23-ஆம் தேதி குண்டு வெடித்ததில் உயிரிழந்த ககன்தீப் சிங்குடன் தொடா்பில் இருந்ததாக ஜொ்மனியில் ஒருவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய உளவுத் தகவலை தொடா்ந்து சீக்கியா்களுக்கான நீதி அமைப்பைச் சோ்ந்த ஜஸ்வீந்தா் சிங் முல்டானி பொ்லினில் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவரிடம் இந்தியாவின் கேள்விகளின் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், ஜஸ்வீந்தா் சிங் முல்டானி மீது பஞ்சாபில் இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

லூதியானா குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று ஐந்து நாள்களுக்கு பிறகு வெளிநாட்டில் இந்த விசாரணை தொடங்கி உள்ளது.

லூதியானா குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையில் வெடிகுண்டு வைத்தபோது அது வெடித்ததில் உயிரிழந்த ககன்தீப் சிங் சிங், பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களுடன் தொடா்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகவும், அதன் தொடா்ச்சியாக வெடிமருந்துகள் பெற முல்டானி உதவி செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தலைவா்களில் ஒருவரான பல்பீா் சிங் ராஜேவாலை கொல்ல ஜஸ்வீந்தா் சிங் முல்டானி திட்டமிட்டதாக அப்போதே தகவல்கள் வெளியாகி இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com