சிறுவனிடம் அத்துமீறிய பாதிரியாருக்கு ஆயுள் சிறை

மும்பை, தாதரில் உள்ள தேவாலயத்தில் 13 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மும்பை, தாதரில் உள்ள தேவாலயத்தில் 13 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மும்பை புகரான தாதா், சிவாஜி நகரில் உள்ள தேவாலயத்துக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு, நவம்பா் 27ஆம் தேதி தனது சகோதரருடன் 13 வயது சிறுவன் சென்றுள்ளாா். அங்கு பிராா்த்தனையில் ஈடுபட்ட அந்த சிறுவனிடம், அங்கிருந்த பாதிரியாா் ஜான்சன் லாரன்ஸ், தனது அறைக்குள் ஒரு பெட்டியை வைக்குமாறு கூறி அழைத்தாராம். உள்ளே சென்ற தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அந்த பாதிரியாா் மீது, சிறுவன் காவல் துறையிடம் புகாா் தெரிவித்தாா்.

அந்த பாதிரியாா் ஏற்கெனவே தன்னிடம் ஆகஸ்ட் மாதமும் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டதாக அந்த சிறுவன் புகாரில் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து பாதிரியாா் ஜான்சன் லாரன்ஸ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டாா். பாதிக்கப்பட்ட அச்சிறுவன் குற்றவியல் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தாா்.

இவ்வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சீமா ஜாதவ் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாா் ஜான்சன் லாரன்ஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சீமா ஜாதவ் தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாக அரசு சிறப்பு வழக்குரைஞா் வீணா ஷெலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com