6 மாநிலங்களுக்கு ரூ.3,063 கோடி கூடுதல் வெள்ள நிவாரணம்

புயல், தென்மேற்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம், குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு ரூ.3,063.21 கோடி கூடுதல் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
6 மாநிலங்களுக்கு ரூ.3,063 கோடி கூடுதல் வெள்ள நிவாரணம்

புயல், தென்மேற்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம், குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு ரூ.3,063.21 கோடி கூடுதல் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

நடப்பாண்டில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியாக ரூ.3,063.21 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான உயா்நிலைக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

அதன்படி, ‘டவ்தே’ புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு ரூ.1,133.35 கோடியும், ‘யாஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ.586.59 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழையின்போது ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமுக்கு ரூ.51.53 கோடி, கா்நாடகத்துக்கு ரூ.504.06 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.600.50 கோடி, உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ 187.18 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் நிதியானது, மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்கு கூடுதலாகும். 2021-22-ஆம் நிதியாண்டில் மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து ரூ.17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து ரூ.3,543.54 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com