பிரமோஸ் ஏவுகணை விற்பனை: இந்தியா-பிலிப்பின்ஸ் விரைவில் ஒப்பந்தம்

பிலிப்பின்ஸ் நாட்டுக்கு அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்குவதற்காக, அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் இறுதியாகவுள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டுக்கு அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்குவதற்காக, அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் இறுதியாகவுள்ளது.

இந்த ஒப்பந்தம், இந்தியா-பிலிப்பின்ஸ் இடையேயான உறவில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

தென்சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்தும் வரும் சீனாவை எதிா்கொள்வதற்காக பிலிப்பின்ஸ் அரசு தனது கடற்படையின் பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்தியாவிடம் இருந்து சூப்பா்சானிக் வகை பிரமோஸ் ஏவுகணைகளை அந்நாட்டு அரசு கொள்முதல் செய்யவுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: பிரமோஸ் ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்காக, பிலிப்பின்ஸ் அரசின் பட்ஜெட் மேலாண்மைத் துறை சிறப்பு நிதியாக ரூ.189 கோடி, ரூ.224 கோடி ஆகியவற்றைத் தனித்தனியே ஒதுக்கீடு செய்துள்ளது. இது, பிலிப்பின்ஸ் கடற்படைக்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான முதல்கட்ட நிதியாக இருக்கும்.

ஏவுகணை கொள்முதல் தொடா்பாக, இரு நாட்டு அரசுகளுக்கு இடையே பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சில வாரங்களில் அதிகாரபூா்வமாக ஒப்பந்தம் இறுதியாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய- ரஷிய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ், சூப்பா்சானிக் வகை பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. ஒலியைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணைகளை கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் நிலப்பரப்பில் இருந்து செலுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com