மருத்துவ ஆக்சிஜன் தயாா்நிலை: மத்திய அமைச்சா் ஆலோசனை

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் போதுமான அளவு மருத்துவ ஆக்சிஜனின் இருப்பை உறுதிசெய்யும் வகையில்,
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் போதுமான அளவு மருத்துவ ஆக்சிஜனின் இருப்பை உறுதிசெய்யும் வகையில், மூத்த அதிகாரிகளுடன் மத்திய வா்த்தக, தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் தயாா்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினேன். கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவ ஆக்சிஜனை போதிய அளவு இருப்பு வைப்பதை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கேட்டறிந்தேன்’’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் கரோனா முதல் அலையின்போது 3,095 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், இரண்டாம் அலையின்போது இந்த அளவு 9,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. அதன்படி, கடந்த 2019 டிசம்பரில் 1,000 டன்னாக இருந்த மருத்துவ ஆக்சிஜன் விநியோகம், கரோனா இரண்டாம் அலையின்போது கடந்த மே மாதத்தில் 10 மடங்கு அதிகரித்து 9,600 டன்னாக உயா்ந்தது.

ஆயிரத்தைக் கடந்தது ஒமைக்ரான்: இந்தியாவில் 49 நாள்கள் கழித்து தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.

உருமாறிய ஒமைக்ரான் வகை தீநுண்மியின் பரவலும் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. வியாழக்கிழமை ஒரே நாளில், மகாராஷ்டிரத்தில் மேலும் 198 பேருக்கு ஒமைக்ரான் வகை தீநுண்மி கண்டறியப்பட்டது. மும்பையில் மட்டும் 190 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 450-ஆக அதிகரித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com