அதிர்ச்சித் தகவல்: பெட்ரோல், டீசல் மீது புதிய வரி விதிப்பு

பெட்ரோல், டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிஎஸ்) வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
அதிர்ச்சித் தகவல்: பெட்ரோல், டீசல் மீது புதிய வரி விதிப்பு
அதிர்ச்சித் தகவல்: பெட்ரோல், டீசல் மீது புதிய வரி விதிப்பு


புது தில்லி: பெட்ரோல், டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிஎஸ்) வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.2.5-ம், டீசல் விலையில் ரூ.4-ம் உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான புதிய வரி விதிப்பு முறையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், மத்திய பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைப்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரை வைத்துள்ளார்.

புதிய வரிவிதிப்பு முறையால் விரைவில் பெட்ரோல் விலையில் ரூ.2.5ம், டீசல் விலையில் ரூ.4-ம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து, புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், சலுகைகளை எதிர்பார்த்த பொதுமக்களுக்கு, பெட்ரோல், டீசல் மீதான புதிய வரி விதிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலை இன்று காலை நிலவரப்படி சென்னையில் லிட்டருக்கு ரூ.88.82 ஆகவும், தில்லியில் ரூ.86.30 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.87.69 ஆகவும், மும்பையில் ரூ.92.86 ஆகவும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com