பட்ஜெட் உரை நிறைவு: அவை நாளை வரை ஒத்திவைப்பு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மக்களவை செவ்வாய்கிழமை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 
அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை
அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மக்களவை செவ்வாய்கிழமை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை திங்கள்கிழமை(பிப்.1) தாக்கல் செய்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். 

சரியாக காலை 11 மணிக்கு உரையைத் தொடங்கிய அமைச்சர் 12.50 மணிக்கு முடித்தார். ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் உரையை வாசித்தார். 

இதையடுத்து, நாடாளுமன்ற அவை நாளை(செவ்வாய்கிழமை) மாலை 4 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி 2020  பட்ஜெட் உரையை மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், 162 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com