
அமைச்சர் நிர்மலா சீதாராமன்
உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.
இதன்பின்னர் இன்று பிற்பகல் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்க முடிவு செய்த நேரத்தில் 2021-22 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த உத்வேகம், தரமான முறையில் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து அதன்படி, உள்கட்டமைப்பில் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்தோம்.
சாலைகள், மின் உற்பத்தி, பாலங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பட்ஜெட் உருவாக்கப்பட்டது.
நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் வரி விதிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.