
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).
ஒடிசாவின் கோராபுட் பகுதியில் நடைபெற்ற வேன் விபத்தில் உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட செய்தியில்,
ஒடிசா கோராபுட் பகுதியில் நடந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் கோட்புட் என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேன் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.