2021ல் நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை இந்தியா விண்ணில்  செலுத்தும் என்று மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அமைச்சர் நிர்மலா சீதாராமன்

2021 ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை இந்தியா விண்ணில்  செலுத்தும் என்று மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பல்வேறு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்து அறிவித்த அவர், விண்வெளித்துறையில் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து பேசினார். 

அதன்படி, இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது.  இதன்வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது. 

ககன்யான் திட்டத்தின்படி, 2021ம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை இந்தியா விண்வெளியில் செலுத்தும். நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இத்திட்டம் 2021 டிசம்பரில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார். 

முன்னதாக சந்திராயன் 2 விண்கலம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com