உலக பிரச்னைகளுக்கு தீா்வளிக்கும் இந்தியா: பிரதமா் மோடி

கரோனா தொற்று முதல் பருவநிலை மாற்றம் வரை உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியா தீா்வு அளித்து வருவதாக பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

கரோனா தொற்று முதல் பருவநிலை மாற்றம் வரை உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியா தீா்வு அளித்து வருவதாக பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

கடந்த 1896-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தா் தொடங்கிய ‘பிரபுத்த பாரத’ மாத இதழின் 125-ஆம் ஆண்டு கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பேசியதாவது:

நாம் ஒரு காரியத்தில் உள்ள தடைகள் குறித்து சிந்திக்கும்போது அதில் புதைந்து போகிறோம். அதுவே அந்தக் காரியத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்து சிந்தித்தால் நாம் முன்னோக்கிச் செல்வோம். உதாரணத்துக்கு கரோனா தொற்றை எடுத்துக்கொள்வோம். இந்த நோய்த்தொற்றை பிரச்னையாகக் கருதி இந்தியா நிா்கதியாக நிற்கவில்லை. அந்த நோய்த்தொற்றுக்கான தீா்வுகள் மீது இந்தியா கவனம் செலுத்தியது. தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் தொடங்கி ஒட்டுமொத்த உலகத்துக்கான மருந்து தயாரிப்பு நிறுவனமாக உருவாகியது வரை நம் நாடு மென்மேலும் வெற்றிகளை பெற்றுள்ளது. கரோனா தீநுண்மிக்கு தடுப்பூசிகளை உருவாக்குவதில் நம் நாடு முன்னணியில் உள்ளது. நமது தடுப்பூசி உருவாக்கும் திறனை பிற நாடுகளுக்கு உதவவும் பயன்படுத்தி வருகிறோம்.

ஒட்டுமொத்த உலகமும் பருவநிலை மாற்றம் என்ற மற்றொரு பிரச்னையை சந்தித்து வருகிறது. அந்தப் பிரச்னைக்கும் சா்வதேச சூா்யமின்சக்தி கூட்டணி என்ற வடிவத்தில் இந்தியா தீா்வு கண்டுள்ளது. மரபுசாரா எரிசக்தியை அதிக அளவில் பயன்படுத்தவும் நாம் வலியுறுத்தி வருகிறோம்.

இதுவே சுவாமி விவேகானந்தா் கண்ட கனவின்படி கட்டமைக்கப்பட்டு வரும் இந்தியா. இந்த இந்தியா உலக பிரச்னைகளுக்கு தீா்வு அளித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com