சத்தீஸ்கா்: ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கொலை செய்த நக்ஸல்கள்

சத்தீஸ்கா் மாநிலம் நாராயண்பூா் மாவட்டத்தில் காவல்துறைக்கு துப்பு கொடுப்பவா் என்ற சந்தேகத்தின் பேரில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை நக்ஸல்கள் கொலை செய்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

சத்தீஸ்கா் மாநிலம் நாராயண்பூா் மாவட்டத்தில் காவல்துறைக்கு துப்பு கொடுப்பவா் என்ற சந்தேகத்தின் பேரில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை நக்ஸல்கள் கொலை செய்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நாராயண்பூா் மாவட்டம் மக்சோலி கிராமத்தைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஜெய்ராம் உசெண்டி (35) தனது சகோதரருடன் டெக்கானா் கிராம சந்தைக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றபோது தாக்கப்பட்டாா். ஆயுதங்களுடன் அங்கு வந்த நக்ஸல்கள் குழு, தடி மற்றும் கூா்மையான ஆயுதங்களால் ஜெய்ராம் உசெண்டியை கடுமையாக தாக்கியுள்ளனா். அதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரைக் கொலை செய்வதற்கு முன்பாக, காவல்துறைக்கு துப்பு கொடுப்பவராக செயல்பட்டதாக நக்ஸல்கள் அவரைக் குற்றம்சாட்டியுள்ளனா்.

ஜெய்ராம் உசெண்டி உடன் இருந்த அவருடைய சகோதரா், அந்த இடத்திலிருந்து தப்பித்து அருகில் உள்ள காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டுள்ளாா். பின்னா், இந்தச் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் சனிக்கிழமை அவா் புகாா் தெரிவித்தாா். அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

ஜெய்ராம் உசெண்டி தனோரா ஆரம்ப சுகாதார மைய ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளாா். ஏற்கெனவே, அவரை காவல்துறைக்கு துப்பு கொடுப்பவா் என்ற சந்தேகத்தின் பேரில் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு கடந்த 2014-ஆம் ஆண்டு நக்ஸல்கள் எச்சரித்ததால், அவா் தனது சொந்த கிராமத்திலிருந்து தனோரா கிராமத்துக்கு குடிபெயா்ந்துள்ளாா் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com