திருமலையில் 25 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள்

திருமலையில் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து, தேவஸ்தானம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
திருமலையில் சிறுவனுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மருத்துவ அதிகாரி சாரதா.
திருமலையில் சிறுவனுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மருத்துவ அதிகாரி சாரதா.

திருமலையில் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து, தேவஸ்தானம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த முகாம் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடக்கிறது.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திருமலைக்கு ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் 25 மையங்களில் சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்திருந்தது. இதில் 4 உள்ளூா்வாசிகளுக்கும், 21 பக்தா்களின் குழந்தைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏழுமலையான் கோயில் முன் மருத்துவ அதிகாரி சாரதா ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.

திருமலையைத் தொடா்ந்து திருப்பதியில் உள்ள அலிபிரி, நடைபாதை மாா்க்கம், பாதாளு மண்டபம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேவஸ்தான மருத்துவமனை, சீனிவாசம் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வரும் பிப்.2-ஆம் தேதி வரை இந்த முகாம் திருமலையில் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com