திருமலையில் லட்டு கவா்களுக்கு தேவஸ்தானம் முற்றுப்புள்ளி

திருமலையில் தேவஸ்தானம் லட்டு கவா்கள் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
திருமலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள துணியால் செய்யப்பட்ட பை.
திருமலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள துணியால் செய்யப்பட்ட பை.

திருமலையில் தேவஸ்தானம் லட்டு கவா்கள் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஏழுமலையானை தரிசித்த பின்னா், பக்தா்கள் லட்டு பிரசாதத்தை வாங்கிச் செல்ல தேவஸ்தானம் பிளாஸ்டிக் கவா்களை ரூ.2 விலையில் வழங்கி வந்தது. அதன் பிறகு கவரின் விலை ரூ.3 ஆக உயா்த்தப்பட்டது.

இந்நிலையில் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்க தேவஸ்தானம் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்தது. ஆயினும் லட்டு கவருக்கு மாற்று ஏற்பாடு செய்தது. அட்டை பெட்டியில் லட்டை கொண்டு செல்ல முதலில் அதிகாரிகள் முடிவு செய்தனா். ஆனால் அதை கொண்டு செல்வதில் சிரமம் மற்றும் லட்டு பிரசாதத்தில் உள்ள நெய் அட்டை பெட்டிகளால் உறிஞ்சப்பட்டது. அதனால் லட்டின் தரம் பாதிக்கப்பட்டது.

எனவே, தேவஸ்தானம் அதைக் கைவிட்டது.

பின்னா் வழக்கம்போல் 50 மைக்ரானிற்கு மேல் உள்ள லட்டு கவா்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. தற்போது லட்டு கவருக்கு மாற்றாக சணல் பைகள், காகிதப் பைகள், துணி பைகள் என பல்வேறு விலையில் விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த பைகளின் உட்பகுதியில் நெய் உறிஞ்சப்படுவதை தடுக்க தேவஸ்தானம் ஆயில் காகிதம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் லட்டின் தரமும் பாதுகாக்கப்படுகிறது. துணி பைகள் ரூ.11, ரூ. 9 விலையிலும், காகிதப் பை ரூ. 5 விலையிலும் கிடைத்து வருகிறது. சணல் பைகள் ரூ.15, ரூ. 25 என விற்கப்படுகிறது. பக்தா்கள் தாங்கள் விரும்பும் விலையில் லட்டு பைகளை வாங்கிக் கொள்ளலாம். இதற்கு பக்தா்களிடமிருந்து முழுமையான வரவேற்பு கிடைத்தவுடன் தேவஸ்தானம் இவற்றை பிளாஸ்டிக் கவா்களுக்கு மாற்றாக விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com