பிப்.3-இல் மின்வாரிய ஊழியா்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

நாடு தழுவிய அளவில், பிப்.3-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்வாரிய ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

நாடு தழுவிய அளவில், பிப்.3-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்வாரிய ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தொழிற்சங்கத்தினா் கூறியதாவது: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வந்தனா். அவா்கள், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதாகச் சொன்னாலும், சட்டத்திலுள்ள சில ஓட்டைகளைப் பயன்படுத்தி, ஏல முறையில் உற்பத்தியையும், விநியோகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கு மட்டுமே மின் வாரியத்தின் வருவாயில் பெரும் பகுதி பயன்படுகிறது.

மின்வாரியம் தனியாரிடம் சென்றால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கேள்விக்குறியாகும். மின்சாரம் சந்தைப் பொருளாக மாறும். எனவே, மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கைவிடுவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.3-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com