பிகாருக்கு அளித்த வாக்குறுதிகள் எங்கே? மகாராஷ்டிர அமைச்சர் கேள்வி

மத்திய நிதிநிலை அறிவிப்பில் மகாராஷ்டிரம், பிகாரில் தேர்தலுக்கு முன் பாஜக அளித்த வாக்குறுதிகள் எங்கே என மகாராஷ்டிர அமைச்சர் சாகன் புஜ்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய நிதிநிலை அறிவிப்பில் மகாராஷ்டிரம், பிகாரில் தேர்தலுக்கு முன் பாஜக அளித்த வாக்குறுதிகள் எங்கே என மகாராஷ்டிர அமைச்சர் சாகன் புஜ்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய அரசு தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள அறிவிக்கப்பட்டன. 

சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு இந்த மாநிலங்களுக்கு திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் மகாராஷ்டிர அமைச்சர் சாகன் புஜ்பால், “இது பெயரளவிலான பட்ஜெட். மகாராஷ்டிரத்திற்கு இதில் என்ன இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் “இது தேர்தலுக்குட்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு பிகாருக்கு தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள் ஏதாவது அறிவிக்கப்பட்டதா? தேர்தலுக்கு முன்னர் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எங்கே? தேர்தல் முடிந்தது, வாக்குறுதிகளும் முடிந்துவிட்டன” என புஜ்பால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com