எல்லைப் பாதுகாப்பில் பதிலடி கொடுக்க இந்தியா தயார்: ராஜ்நாத் சிங்

எல்லையில் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுப்பதற்கும், ஒருமைப்பாட்டை காப்பதற்கும் இந்தியா தயாராகவுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

எல்லையில் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுப்பதற்கும், ஒருமைப்பாட்டை காப்பதற்கும் இந்தியா தயாராகவுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அதிநவீன விமான கண்காட்சி இன்று காலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் தொடங்கியது.

இன்று முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியின் முதல் நாளில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்களை இயக்கி வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைகளில் எந்தவகையான தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகவுள்ளது. எல்லைகளில் ஒருமைப்பாட்டைக் காப்பதில் இந்தியா கவனமாக செயல்படுகிறது.

எல்லைப் பகுதிகளிலும், கடற்கரையோர எல்லைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லை மற்றும் வான்வழி பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை இந்தியாவின் பலத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com